ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? எல்.முருகன்

கருப்பர் கூட்டம் செயல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நேரத்தில் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கோடானு கோடி இந்து உணர்வாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்ட கருப்பர் கூட்டம் செயல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நேரத்தில், அதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் திரு.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கோடானு கோடி இந்து உணர்வாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்ட கருப்பர் கூட்டம் செயல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நேரத்தில், அதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் திரு.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? pic.twitter.com/RFzmIUJwCd
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) July 24, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025