எய்ம்ஸ் டெல்லி மருத்துவமனையில் 5 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி

Default Image

கொரோனா தடுப்பு ஊசியாகிய கோவாக்சின்  5 தன்னார்வலர்கள் மீது எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று போடப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த பல மாதங்களாக உலகையே உலுக்கி வரும் நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1 கோடியை தாண்டியுள்ளது , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது . இந்நிலையில் இதற்கான மருந்துகளையும் தடுப்பூசிகளையும் பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் விரைந்து கண்டுபிடித்து வருகின்றனர். தற்பொழுது பல இடங்களில் இதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், முறையாக அதிகாரபூர்வமான மருந்து என ஒன்றும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதுவரை பல ஆய்வுகளில் வெற்றிகண்டு கொரோனாவுக்கு எதிரான நல்ல செய்தியை கொடுத்துள்ளனர். தற்பொழுது அங்கு 5 தன்னார்வலர்கள் மீது எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி நேற்று  போடப்பட்டுள்ளது. இந்த சோதனைக்காக 3,500 பேர் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் 100 ஆரோக்கியமான நபர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆரம்கட்டத்தில்  இந்த மருந்தானது  10 நோயாளிகள் மீது செலுத்தப்படும் .பின்பு அதன் செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் .அதில் வரும் முடிவுகளை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எய்ம்ஸில் இந்த சோதனைகளுக்கு தலைமை தாங்கும் டாக்டர் ராய் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்