2 முட்டை இருந்தால் போதும், மாலை நேர இனிப்பு உணவு தயார்!
மாலை நேரத்தில் குழந்தைகள் எதாவது சாப்பாடு கேட்பது வழக்கம், நாம் அதற்காக கடைகளில் விற்கும் எண்ணெய் பண்டங்களை வாங்கி கொடுக்காமல் வீட்டிலிருக்கும் முட்டையை வைத்து சுவையான வட்லாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- முட்டை
- பால் பவுடர்
- சர்க்கரை
- ஏலக்காய்
- உப்பு
செய்முறை
முதலில் முட்டையை நன்றாக உடைத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நுரை வரும் அளவுக்கு அடித்து வைத்து கொள்ளவும். பின்பு சர்க்கரை மற்றும் பால் பவுடரை நன்றாக கலக்கி முட்டை கரைசலுடன் சேர்க்கவும்.
அனைத்தையும் கலந்தபின்பு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்து ஏலக்காய் சேர்த்து ஒரு கிண்ணத்தில் வைத்து ஆவியில் அவித்து எடுக்கவும். அட்டகாசமான இனிப்பான வட்லாப்பம் தயார்.