போலி இ-மெயில் விவகாரம் : மாரிதாஸ் மீது வழக்கு பதிவா.?
போலி இ-மெயில் விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி பெரியாரியச் சித்தாந்த அமைப்புகளால் இயக்கப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டு, இது தொடர்பான குற்றச்சாட்டை மக்களும் சேர்ந்து அந்த தனியார் தொலைக்காட்சி குழுமத்தலைமைக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று மாரிதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் தான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு தனியார் தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி பதிலளித்திருக்கிறார் என்று மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மின்னஞ்சல் பொய்யானது என்று வினய் சாரவாகி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், மோசடி மெயில் விவகாரம் தொடர்பாக வினய் சராவகி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
அந்த முதல் தகவல் அறிக்கையில், மோசடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச்செய்திகளை பரப்புவது ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Impersonator created email ID in my name: I checked with Switzerland’s Protonmail and their reply explains it all. FAKE email in my name used to spread falsehood pic.twitter.com/LoRqe9rGML
— Vinay Sarawagi (@jagora) July 14, 2020