கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு ! டிஎஸ்பி உள்ளிட்டோரை இடைநீக்கம் செய்த உத்தரபிரதேச முதல்வர்

சஞ்சித் யாதவை கடத்தி கொலை செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி அபர்ணா குப்தா மற்றும் துணை எஸ்பி மனோஜ் குப்தா ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லேப் டெக்னீசியன் சஞ்சித் யாதவ் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பிபி ஜோக்தாண்டை கடந்த ஜூன் 22-ஆம் தேதி விசாரிக்குமாறு அரசு அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்றது .இந்த வழக்கில் இறந்தவரின் நண்பர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிறைபிடிக்கப்பட்டவர்கள் ஜூன் 26-27 தேதிகளில் சஞ்சீத்தை கொலை செய்து அவரது உடலை பாண்டு ஆற்றில் வீசியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
சஞ்சீத்தை விடுவிப்பதற்காக ரூ .30 லட்சம் தொகையை வழங்க வேண்டும் என்று ஜூன் 29 அன்று கடத்தல்காரர்களிடமிருந்து அழைப்பு வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .மேலும் ஜூலை 13 ம் தேதி, போலீஸ் முன்னிலையில் ரூ .30 லட்சம் உள்ள பையை கடத்தல்காரர்களிடம் வழங்கியதாகவும், கடத்தல்காரர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொன்னாலும் அதை செய்ததாகவும் , ஆனால் அவர்கள் யாதவை விடுவிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் எஸ்.எஸ்.பி (கான்பூர்) தினேஷ் குமார் பிரபு கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக இருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். அவர்கள் சஞ்சீத்தை கடத்தி ஜூன் 26 அல்லது ஜூன் 27 அன்று கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறினார். பாதிக்கப்பட்டவரின் உடலைக் கண்டுபிடித்து, குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி அபர்ணா குப்தா மற்றும் பின்னர் துணை எஸ்பி மனோஜ் குப்தா ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏற்கனவே பார்ரா காவல் நிலையத்தின் ரஞ்சித் ராய் மற்றும் ச ராஜேஷ் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.