20 கிலோ கஞ்சா கடத்திய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது..!
ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து 20 கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருந்த மூன்று பேரை அரசு ரயில்வே போலீஸ் நேற்று கைது செய்தது.
விசாகப்பட்டினத்தில் இருந்து மைனர் சிறுமி, மற்றும் 21 வயது பெண் மற்றும் 23 வயது இளைஞன் ஒருவர் வந்துள்ளனர் .அப்பொழுது கையில் 20 கிலோ கஞ்சாவுடன் டாக்ஸியில் ஏற முயன்ற போது கவத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர், விசாரணை நடத்தியதில் அதில் ஒரு இளைஞர் வங்காளத்தை சேர்ந்த இம்ரான் என்றும் அந்த சிறுமி டெல்லியை சீமா என்ற பென் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில் மூவரும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு வேலை செய்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர்கள் மூவரும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் வழியாக வந்து ஆக்ராவிலிருந்து சாலை வழியாக டெல்லி செல்விருந்ததாக கூறப்படுகிறது, மேலும் அவர்கள் மூன்று பேரும் பரஸ்பர நபர் ராகுல் மூலம் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் கைது குறித்து டெல்லி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அவர்கள் மூன்று பேரின் மேல் எதுவும் வழக்குகள் உள்ளதாக தகவல் கேட்டனர், இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஆக்ரா கண்டோன்மென்ட்டின் ஜிஆர்பி இன்ஸ்பெக்டர் விஜய் சிங் சக் கூறினார்.