தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணையை மார்ச் 22-ல் தொடங்குகிறார்!

Default Image

அதுல்ய மிஸ்ரா வரும் 22-ஆம் தேதி தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பாக  விசாரணையைத் தொடங்குகிறார்.

குரங்கணி பகுதியில் காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா வரும் 22-ஆம் தேதி குரங்கணியில் விசாரணையைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான சூழ்நிலை, டிரக்கிங் ஏற்பாட்டாளர்களின் பங்கு மற்றும் தவறுகள், டிரெக்கிங்குக்கு அனுமதி தொடர்பான வனத்துறை விதிகள் உள்ளிட்டவை குறித்து இவர் விசாரணை நடத்தவுள்ளார். எதிர்காலத்தில் விபத்துகள், அசம்பாவிதங்களை தடுப்பது குறித்த பரிந்துரைகளையும் அளிப்பார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்