வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை வாங்கிய பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
பிளிப்கார்ட் ஃபேஷன் பொருட்கள்,மளிகை பொருட்கள், பிற பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் மொத்தமாக வாங்குவதற்கு ஒரு இடமாக உள்ளது . தனது வாடிக்கையாளர்களுக்கு பல விதமான திட்டங்களும், சலுகைகளும் அளித்து வருகிறது.சுமார் 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்திய தயாரிப்புகள், விற்பனையாளர்களும் பொருட்களை விற்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ளது.இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இதன் மூலம் சில்லரை வர்த்தகர்கள் உள்ளிட்டோரின் பிரத்யேக தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்று கூறினார்.ஆகஸ்ட் மாதம் பிளிப்கார்ட் மொத்த விற்பனை செயல்படத் தொடங்கும்.ஃபேஷன் மற்றும் மளிகை பொருட்களின் விற்பனை முதல் கட்டமாக நடைபெறும்.பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆஷர்ஷ் மேனன் இந்தப்பிரிவுக்கு தலைவராக இருப்பார்.இனி பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்களாக வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் மாற்றப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.