#BREAKING : சுதந்திர தினம் – வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்கள்களை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி நடத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . சுதந்திர தின நிகழ்ச்சியின் போது சரியான சமூக இடைவெளி கடைபிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் .அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் .சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும். கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும் என்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம் – வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு #IndependenceDay pic.twitter.com/FSEAzc3O8p
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 24, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025