சட்டப்பேரவையில் ஆளுநர் கிரண்பேடி உரை.! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்து வெளிநடப்பு.!
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அவகாசம் முடிந்தநிலையில் ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஒரு வாரத்திற்கு முன் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
இதையடுத்து, கடந்த 20-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் கிரண்பேடி உரையாற்ற மறுத்த நிலையில் அவரது எதிர்ப்பையும் மீறி முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் கிரண்பேடி இன்று பேரவையில் உரையாற்றினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.