#FACT CHECK : கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினாரா அமிதாப்பச்சன் ?
கொரானா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகி நடிகர் அமிதாப்பச்சன் வீடு திரும்பியுள்ளார் என்று செய்தி வெளியான நிலையில் விளக்கம் அளித்துள்ளார் அவர்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அண்மையில் பாலிவுட் நடிகர் ஆகிய அமிதாப்பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது பேத்திக்கும் இந்த கொரோனா உறுதி செய்யப்பட்டு அனைவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அமிதாப்பச்சன் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன், அதில் எனக்கு கொரணா தொற்றிருந்தது உறுதியாகி உள்ளது என்றும் கூறியிருந்தார். இவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என சக நடிகர்களும் அவரது ரசிகர்களும் பிரார்த்தனை செய்து கொள்வதாக சமூக வலைதள பக்கங்களில் ஆறுதல் கூறி வந்தனர். இதனிடையே இன்று அமிதாப்பச்சன் முழுவதுமாக குணமாகி வீடு திரும்பியுள்ளார் என்று செய்திகள் வெளியானது.இந்நிலையில் இது குறித்து அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.அதாவது இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது என்று தெரிவித்துள்ளார்.
.. this news is incorrect , irresponsible , fake and an incorrigible LIE !! https://t.co/uI2xIjMsUU
— Amitabh Bachchan (@SrBachchan) July 23, 2020