#BREAKING: புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு.!

Default Image

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது  காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் -விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது.இன்று மர்ம நபர்கள் எம்ஜிஆர் சிலை மீது  காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில்அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் , வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீஸ் பேச்சுவார்த்தைக்கு பின்னர் எழுந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்