அடுத்த மாதம் அமெரிக்கா – தென்கொரியா கூட்டுப்பயிற்சி தொடக்கம்!
அடுத்த மாதம் அமெரிக்கா – தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி தொடங்குகிறது. மார்ச்சில் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை இரு நாடுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெற்ற காரணத்தால் கூட்டுப் பயிற்சியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கொரிய தீபகற்பத்தில் இருநாடுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் வேளையில் பதற்றம் ஏற்படும் சூழலில், இந்த ஆண்டு இருநாடுகளின் அதிபர்களும், வடகொரிய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதால், பயிற்சியில் சிக்கல் இருக்காது என்று கருதப்படுகிறது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் கூட்டுப் பயிற்சியில் 23 ஆயிரம் அமெரிக்க வீரர்களும், 3 லட்சம் தென் கொரிய வீரர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.