நேபாளத்தில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி விமான போக்குவரத்துக்கு தொடக்கம்!
நேபாளத்தில் ஊரடங்கு தளர்வாக வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் விமான போக்குவரத்துக்கு துவங்க உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை, இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகளை கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேபாளத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதியிலிருந்து விமான போக்குவரத்துக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 20 இல் நிறுத்தப்பட்ட விமானம் தற்பொழுது தான் செயலடவுள்ளது.