விபசாரத்திற்காக பெண்களை கடத்திய சோனு பஞ்சாபன்.! 24ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.!
விபசாரத்திற்காக பெண்களை கடத்திய சோனு பஞ்சாபனுக்கு 24ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கீதா அரோரா என்ற சோனு பஞ்சாபன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விபச்சார தொழிலை செய்து வந்தார். பல நடிகைகள் முதல் மாடல்கள் வரை தொழிலுக்கு பயன்படுத்தி வந்தார். மேலும் சிறுமிகளை கடத்தி வலுக்கட்டாயமாக போதை மருந்துகளையும், மதுபானம் வழங்கியும் தனது தொழில்களில் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 2007-ல் சட்டவிரோத கடத்தல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோனு, சில நாட்களில் ஜாமீனில் வெளியானார்.
இதன் பின்னர் பல முறை போலீசாரிடம் பிடிப்பட்டும், தப்பி விட்டார். இந்த நிலையில் கடத்தல், விபச்சாரம் என மீண்டும் தனது தொழிலில் ஈடுபட்ட சோனு மற்றும் அவரது 4 கூட்டாளிகளும், 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். அதில் சோனு மற்றும் கூட்டாளியான சந்தீப் பெட்வால் ஆகியோர் திகார் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் டெல்லி நீதிமன்றம் விபசாரம் மற்றும் கடத்தல் வழக்கிற்காக கைது செய்யப்பட்ட சோனு பஞ்சாபனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததோடு, இவருக்கு இந்த நாகரீக சமுதாயத்தில் வாழ தகுதி இல்லை என்றும், கடுமையான தண்டனைக்கு தகுதியானவர் என்று நீதிபதி கூறியதோடு ரூ. 64,000அபராதமும் விதித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சந்தீப் பெட்வாலுக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 65,000 அபராதமும் விதிக்கப்பட்டது.