பேராவூரணி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தொகுதியின் எம்எல்ஏ ஆவார்.தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளார் .தமிழகத்தில் இது வரை 4 அமைச்சர்கள் உட்பட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.