கொரோனா தடுப்பு மருந்து ! 50 % இந்தியாவுக்கு வழங்கவே முடிவு செய்துள்ளோம் – ஆதார் பூனவல்லா
எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பட்சத்தில் அதில் 50 % இந்தியாவுக்கு வழங்கவே முடிவு செய்துள்ளோம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குனர் இயக்குனர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது.முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இதனிடையே தான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்தனர். மேலும் அதற்க்கு 1077 தன்னாலர்வர்கள் முன்வந்தனர். அவர்களின் உடம்பில் கொரோனா தொற்று செலுத்தப்பட்டது.அதன்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை அவர்கள் மீது செலுத்தினார்கள். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 1077 பேருக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாக அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரியவந்துள்ளதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எனவே இந்தியாவில் புனேவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் சீரம் இன்ஸ்டிடியூட் அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது. இந்தியாவுக்கு இந்த மருந்தினை தயாரிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. இந்நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குனர் இயக்குனர் ஆதார் பூனவல்லா கூறுகையில் ,கொரோனா தடுப்பு மருந்தை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பட்சத்தில் அதில் 50 % இந்தியாவுக்கு வழங்கவே முடிவு செய்துள்ளோம். மற்றவற்றைப் பிற நாடுகளுக்கு மாதந்தோறும் வழங்குவோம்.தனிமனிதர் எவரும் மருந்தை விலைகொடுத்து வாங்க தேவை இல்லை , ஏனென்றால் கொரோனா மருந்துகளை பெரும்பாலும் அரசே வாங்கும் என்று தெரிவித்துள்ளார்.