பி.சி.சி.ஐ. இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜகான் கொடுத்த குடும்ப வன்முறை புகார்கள் மற்றும் அவரது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்திய அணியில் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் குறித்த தகவல்களை பி.சி.சி.ஐயிடம் போலீசார் கோரியிருந்தனர். இதனிடையே ஹாசின் ஜகானால் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பெண்ணான அலிஷ்பா (Alishba) தனக்கும் முகமது ஷமிக்கும் மேட்ச் ஃபிக்சிங் உள்ளிட்ட எந்தத் தொடர்புகளும் கிடையாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பி.சி.சி.ஐ. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.