அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, கோவை, மற்றும் தென்காசி, நீலகிரி, ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
மேலும் நாளை வடகடலோர தமிழகம், சென்னை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மேலும் இன்று சென்னை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.