தமிழகத்தில் இருந்து தேர்வான 3 எம்.பி. க்கள் பதவியேற்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 3 எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 மாநிலங்களவை  பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில்  திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,  முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான 3 எம்.பி.க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,  முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர்  பதவியேற்றுக்கொண்டனர்.

இவர்களுக்கு அவைத்தலைவர் வெங்கயா  நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஆனால் திமுக சார்பில் திருச்சி சிவா, வழக்கறிஞர் இளங்கோவன்,அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் பதவி ஏற்கவேண்டும். ஆனால் அவர்கள் நேற்று பதவி ஏற்கவில்லை.