தமிழகத்தில் புதிய முறையில் பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் குழு பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.உதாரணமாக குழு பரிசோதனை என்பது 10 பேருடைய ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே முறையில் பரிசோதனை செய்வது ஆகும். இதன் மூலம் சோதனை முடிவில் கொரோனா இல்லையெனில் அவர்களின் முடிவு ஒரே நேரத்தில் கிடைத்துவிடும். கொரோனா இருக்கும் பட்சத்தில் மீண்டும் அவர்களை தனித்தனியே பரிசோதனை செய்யப்படும்.
கொரோனாவை கண்டறிய வேண்டுமெனில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், குழு பரிசோதனை முறையை தமிழக அரசு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.