#BREAKING: கந்த சஷ்டி விவகாரம்.. குகன், சோமசுந்தரத்திற்கு 15 நாட்கள் காவல்.!

Default Image

நேற்று கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரம் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு.

கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து  வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார்.

 இந்த விவகாரத்தில் நேற்று சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அதில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சோமசுந்தரம் என்பவர் அந்த வீடியோவை பதிவு செய்தவர் எனவும், குகன் என்பவர் அந்த வீடீயோவை எடிட் செய்த எடிட்டர் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரம் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்