2021 தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்கும் – சி.பி. ராதாகிருஷ்ணன்

Default Image

2021 தேர்தலில் அதிமுக வெற்றிபெறாது என்று சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.அதிமுகவும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.இதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக மட்டுமே போட்டியிட்டது.

கூட்டணி கட்சிகள் போட்டியிடவில்லை.இதனையடுத்து  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும்  தேர்தல் நடைபெற்றது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கனிசமான இடங்களில் வெற்றி பெற்றது.ஆனால் ஆளுங்கட்சியான அதிமுக ஒரு சில இடங்களில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி அதிமுக கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சற்று சலசலப்பு அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்துக்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது  முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.முதலமைச்சர் இப்படியே இருந்தால் வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்