“என்னை விட “தேசபக்தி” உடையவர்கள் யாரும் கிடையாது” மீண்டும் முகக் கவசம் அணிந்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “என்னை விட தேசபக்தி உடையவர்கள் யாரும் கிடையாது என தெரிவித்தார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே அந்தவகையில், கொரோனா அதிகமாக பாதித்தோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம், மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிகளவில் கொரோனா பரிசோதனையே காரணம் என கடந்த ஏப்ரல் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸை “சீனா வைரஸ்” என அவர்கூறி வருவது, மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி அதிபர் ட்ரம்ப் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியமாட்டார். மேலும், மக்களை முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தமாட்டேன் என கூறியது, மேலும் சர்ச்சை கிளப்பியது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன் ராணுவ மருத்துவமனைக்கு ட்ரம்ப் சென்றார். அப்பொழுது அவர் முதல் முதலாக முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனை பார்த்த மக்கள், அமெரிக்காவில் இந்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு, அதிபர் ட்ரம்ப் முகக்கவசம் அணிந்ததாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தான் இரண்டாம் முறையாக முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “என்னை விட தேசபக்தி உடையவர்கள் யாரும் கிடையாது” என அந்த பதிவில் தெரிவித்தார்.
We are United in our effort to defeat the Invisible China Virus, and many people say that it is Patriotic to wear a face mask when you can’t socially distance. There is nobody more Patriotic than me, your favorite President! pic.twitter.com/iQOd1whktN
— Donald J. Trump (@realDonaldTrump) July 20, 2020
அந்த பதிவில் அவர், “கண்ணுக்கு தெரியாத சீன வைரஸை (கொரோனா வைரஸ்) அளிப்பதற்கு நாங்கள் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காத சூழலில் போது முகக்கவசம் அணிவது தேசபக்தி என சிலர் கூறுகிறார்கள்” எனவும், “என்னை விட தேசபக்தி உடையவர் யாரும் கிடையாது எனவும், உங்களுக்கு பிடித்த அதிபர்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.