பாஜகவினருக்கு பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்துக்களாக தெரியவில்லையா? – மு.க.ஸ்டாலின்

Default Image

பாஜகவினருக்கு பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்துக்களாக தெரியவில்லையா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் தங்களது உரிமைகளுக்காக உறுதியுடன் போராட முன்வர வேண்டும் என்று பதிவிட்டு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது,

  • அரசியல் சட்டத்தின் முக்கிய கூறான சமூக நீதியை சிதைக்கும் பாஜக அரசு கவனம் செலுத்தும் இரண்டு காரியங்கள், மதவாத சிந்தனைகளுக்கு செயல்வடிவம் தருவதும், சமூக நீதியை சாய்த்திடுவதும் தான்.
  • நீட் மூலமாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவ கல்விக் கனவுக்கு சாவு மணி அடித்தார்கள்.
  • மருத்துவக் கல்வியில் சேர்ந்திருக்க வேண்டிய 27% பிற்படுத்தப்பட்ட மாணவர்களில், 12% பெருக்கே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
  • பட்டியலின மக்களுக்கு தந்திருக்க வேண்டிய 18% இட ஒதுக்கீடு தராமல் 15% தருகிறார்கள்.
  • இந்துக்களுக்காக குரல் கொடுப்பதாக சொல்லும் பாஜகவினருக்கு பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்துக்களாக தெரியவில்லையா?
  • பெரும்பான்மை மக்களை படிக்க விடாமல், வேலைக்கு தகுதிப்படுத்தாமல் தடுக்கும் பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்போம்.
  • இது சமூக நீதியால் பண்பட்ட மண், கூட்டணிக்கட்சிகள், தோழமைகள் அனைவரையும் சேர்த்து அடுத்த சட்ட நடவடிக்கைகளில் இறங்குவோம்.
  • அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து அமைதி பூண்டிருக்கும் ஆதிமுகவையும், காலத்து அழைப்போம்! பதவிதான் முக்கியம் என ஒதுக்கினால் அவர்களுக்கும் பாடம் கற்பிப்போம்.
  • இடஒதுக்கீட்டை பறிக்கும் போதெல்லாம் சமூகத்தில் உட்பூசல்களை ஏற்படுத்துவார்கள். மக்களை பிளவுபடுத்துவார்கள். திசைதிருப்பும் நாடகங்கள் அரங்கேறும்.
  • தமிழ் சமூகம் ஏமாந்துவிடும் என்று எதிர்பார்ப்பார் தோற்றோடுவர்.
  • என் அந்த அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்