கொரோனா காலத்தில் மத்திய அரசு சாதனைகள் இது தான்.. பட்டியல் போட்ட ராகுல் காந்தி.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை செய்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சில திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 1,154,917 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனா வைரசால் 28,099 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா காலக்கட்டத்தில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகள்.
பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப்,
மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது.
ஏப்ரல்-மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல்.
மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம்.
ஜூன் – பிகார் மெய்நிகர் பேரணி
ஜூலை-ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.
இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு ‘தன்னிறைவு பெற்றது’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
कोरोना काल में सरकार की उपलब्धियां:
● फरवरी- नमस्ते ट्रंप
● मार्च- MP में सरकार गिराई
● अप्रैल- मोमबत्ती जलवाई
● मई- सरकार की 6वीं सालगिरह
● जून- बिहार में वर्चुअल रैली
● जुलाई- राजस्थान सरकार गिराने की कोशिशइसी लिए देश कोरोना की लड़ाई में ‘आत्मनिर्भर’ है।
— Rahul Gandhi (@RahulGandhi) July 21, 2020