“இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி தருக”- பிசிசிஐ!
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்துவதற்கு பிசிசிஐ மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை கொண்டுள்ளதால், இந்த தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ போட்டிகளை நடத்த அனுமதி கோரிய நிலையில், ஐபிஎல் தலைவரான பிரிஜேஷ் படேல், ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி கோரினார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை இறுதிசெய்வது பற்றி இன்னும் 10 ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஐபிஎல் தொடர்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் எனவும், ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் தெரிவித்துள்ளார்.