கொரோனா எதிரொலி..இண்டிகோ விமான நிறுவனத்தில் 10% ஆட்குறைப்பு..!

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டுள்ள துறையாக இருப்பது விமான போக்குவரத்து துறைதான்.  உள்ளூர் மற்றும் வெளிநாடு சேவை அனைத்தும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

விமானத்துறை இயங்காமல் இருப்பதால் இத்தறையில் உள்ள   ஊழியர்களுக்கு  சம்பளக்குறைப்பு மற்றும் பணிநீக்கம்,  போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள இண்டிகோ விமான நிறுவனம் தனது ஊழியர்களில் 10% பேரை நீக்க  இருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து இண்டிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில், கொரோனா காலத்திலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத ஊதியத்தை உலகளவில் வழங்கிய நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்று. நிலையான செலவுகள் விமான நிறுவனங்களுக்கு 40 சதவீதம் வரை அதிகம் என்றும், ஊரடங்கு போது இண்டிகோ ஒரு நாளைக்கு ரூ .40 கோடி செலவழிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 தனது பணியாளர்களிடமிருந்து ஊதியத்தை குறைத்திருந்தாலும், வருவாயின் வீழ்ச்சியை ஈடுசெய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் அவர் கூறினார். மார்ச் 2019 நிலவரப்படி, இண்டிகோவில் 23,531 ஊழியர்கள் இருந்தனர். இண்டிகோவைத் தவிர, ஏர் இந்தியா, விஸ்டாரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஏர் உள்ளிட்ட அனைத்து நிறுவங்களும் செலவுகளைக் குறைக்க இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.