சீனாவில் பெய்து வரும் மழையால் அதிகரிக்கும் இறப்பு விகிதம்.! நீரை வெளியேற்ற வெடி வைத்து அணை தகர்ப்பு.!

Default Image

சீனாவில் அதிகரித்து வரும் மழையால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வெடி வைத்து அணை தகர்த்தி நீரை வெளியேற்றியுள்ளனர்.

சீனாவின் வலிமையான யாங்சே ஆற்றின் கிளை நதியான சுஹே ஆற்றின் அணையிலுள்ள தண்ணீரை குறைக்க வெடி வைத்து அணை தகர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றியுள்ளனர். இந்தாண்டு பெய்து வரும் மழையால், யாங்சே உட்பட பல நதிகளில் நீர் அளவு வழக்கத்துக்கு மாறாக உயர்ந்துள்ளது.

எனவே மழை நீரை வெளியேற்ற அணையில் வெடி வைத்து நீரை வெளியேற்றியுள்ளனர். கடந்த வாரம் 15 மீட்டருக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து யாங்சேயில் உள்ள மூன்று அணைகளின் நீரை  திறந்து விடப்பட்டது. கடந்த வாரம் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வதகவல் படி , ஜூன் மாதத்திலிருந்து 140 -க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளதாகவும் அல்லது காணாமல் போயுள்ளதாகவும் , 37.89 மில்லியன் பேர்  மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2.24 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெய்து வரும் மழையால் இடம்பெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது.

மேலும் ,கடந்த ஞாயிற்றுக்கிழமை, சீனாவின் தேசிய ஆய்வகம் மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்தது. ஏனெனில் தொடர்ச்சியான மழை தொடர்ந்து நாட்டின் பரந்த பகுதியில் அழிவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. சில பகுதிகளில் 70 மி. மீ-க்கு அதிகமான மழையோ, இடியுடன் கூடிய மழையோ மற்றும் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வெள்ளம், நிலச்சரிவு குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியதோடு, அபாயகரமான பகுதிகளில் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் மிக மோசமான வெள்ளப்பெருக்கு என்றால் 1998-ல் நடந்தது என்றும், அதில் 2000-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், கிட்டத்தட்ட 3 மில்லியன் வீடுகள் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்