ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி.. பாஜகவில் சேர சச்சின் பைலட் எனக்கு ரூ .35 கோடி கொடுத்தார்..காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு.!
இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஊடகங்களுடன் பேசிய கிரிராஜ் சிங் மலிங்கா, சச்சின் பைலட் பாஜகவுக்கு மாற ரூ .35 கோடி வழங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்கா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், பணத்தை வாங்க மறுத்ததாகவும், இது குறித்து முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு அறிவித்ததாக கூறினார்.
முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்கா கடந்த செப்டம்பர் மாதம் மற்ற ஐந்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்றார். சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் இரண்டு முறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனால், சபாநாயகர் ஜூலை 14- ம் தேதி தங்களுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நோட்டீஸை ரத்து செய்ய கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்தி மற்றும் நீதிபதி பிரகாஷ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.