அப்பாவி முகத்தை வைத்து..அத்தகைய காரியத்தைச் செய்வார் என யாருக்கும் தெரியாது .. அசோக் கெஹ்லோட்.!

Default Image

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜஸ்தான் முதல்வர் ,  எங்கள் எம்.எல்.ஏக்கள் எந்த தடையும் இல்லாமல் தங்கியிருக்கிறார்கள். ஆனால், சச்சின் பைலட் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்துள்ளனர். அவர்கள் எங்களை அழைத்து தொலைபேசியில் அழுகிறார்கள். அவர்களின் தனிப்பட்ட மொபைல் போன்கள் பறிக்கப்பட்டுள்ளன.

அவர்களில் சிலர் எங்களுடன் சேர விரும்புகிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் தெரிவித்தார். சச்சின் பைலட் கடந்த 6 மாதங்களிலிருந்து பாஜகவின் ஆதரவுடன் சதி செய்து கொண்டிருந்தார். அரசாங்கத்தை கவிழ்க்க சதி நடக்கிறது என்று நான் கூறும்போது யாரும் என்னை நம்பவில்லை. அத்தகைய அப்பாவி முகம் கொண்ட ஒருவர் அத்தகைய காரியத்தைச் செய்வார் என்பது யாருக்கும் தெரியாது என கூறினார்.

சச்சின் பைலட் முதலில் 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறினார்.இருப்பினும் அந்த எண்ணிக்கை இப்போது 18 ஆக உள்ளது. மறுபுறம், கெஹ்லாட் 100 -க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறுகிறார். 200 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 101 என்பது பெரும்பான்மை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளத் தவறியதாக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு  சபாநாயகர் சி.பி. ஜோஷி வழங்கிய தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட்  மற்றும் 18 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்