35 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு.!

திருத்தணி ராமர் கோவிலில் 35 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு.
திருத்தணி மாநகராட்சி 7வது வார்டில் பெரிய ராமர் கோவில் ஒன்று உள்ளது, இந்த கோவிலில் மிகவும் பழமையான ஐம்பொன் விநாயகா் சிலை சுமார் 35 ஆண்டு மேலாக உள்ளது ,இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கோயில் வாசலில் இருந்த தெரு உடைக்கப்பட்டு சில மர்ம நபா்கள் கோயிலின் பூட்டை உடைத்தனர்.
மேலும் உள்ளே புகுந்து அங்கிருந்த ஐம்பொன் சிலை மற்றும் 3 கிராம் தங்கத் தாலி ஆகியவற்றைத் திருடிச் சென்றனா். இந்த சம்பவம் அறிந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், மேலும் இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025