12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டி கொடுத்த “துங்கா” மோப்ப நாய் .!
12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டி கொடுத்த மோப்ப நாய்க்கு பாராட்டு
கர்நாடக மாநிலம் தாவணகெரே ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் துங்கா என்ற 9 வயது மோப்ப நாயை கொண்டு சென்றனர் , அந்த துங்கா 12 கிலோ மீட்டர் ஓடி சென்று தூரத்தில் உள்ள தாண்டா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் நின்றது .
இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த ஒருவரை வேகமகா மடக்கியது, அந்த நபரை பிடித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், விசாரணை நடத்தியதில் இறந்தவர் சந்திரா நாயக் என்று தெரியவந்துள்ளது, மேலும் அவரது நண்பர் சேத்தன் என்பவர் அவரை சுட்டுக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் இந்த நிலையில் இதற்கு உதவிய மோப்பநாய் பூங்காவுக்கு மாநில போலீசார் கூடுதல் டிஜிபி அருண்குமார் மாலை அணிவித்து அந்த துங்கா நாயை பாராட்டினார்.
மேலும் நாயை பராமரித்து வரும் சிவநாயக்கா என்பவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, மேலும் இதுகுறித்து சிவநாயக்கா கூறும்போது பொதுவாக ஒரு மோப்ப நாய் 3முதல் 4 கிலோமீட்டர் தான் ஓடும் ஆனால் எங்கள் துங்கா 12 கிலோமீட்டர் வரை ஒரு பகுதிக்கு செல்லும் இதுதான் கொலை கொலையாளியை பிடிக்க உதவி செய்தது , என்றும் கூறியுள்ளார்.