பீகாரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்குகிறது தேர்தல் ஆணையம்!
பீகாரில் கொரோனா பரவலுக்கு மத்தியில், சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்குகிறது தேர்தல் ஆணையம்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பீஹார் மாநிலத்தில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலுக்காக, தேர்தல் ஆணையம் 32,000 ஈ.வி.எம்-களைக் கொண்டு வந்துள்ளது.
ஈ.வி.எம் கருவிகள் அணைத்து 25 பொறியாளர்களின் மேற்பார்வையில், சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 16,000 ஈ.வி.எம்-களின் சோதனைகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெகாரில் கொரோனா வைராஸ் பரவி வருகிற நிலையில், சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்க ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் எல்ஜேபி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை தள்ளி வைக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.