தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி – வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.!

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி, வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலை சார்ந்த மற்றும் பட்டில சாராத திருக்கோவில்களில் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் மட்டுமில்லாது திருக் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கொரோனா காரணமாக பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு திருக்கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்திற்காக இது இதுநாள்வரை அனுமதிக்கப் படவில்லை. ஆனால் தினசரி பூஜைகளும் மட்டும் அர்ச்சகர்கள் பூசாரிகள் மூலம் நடைபெற்று வருகிறது. தற்போது அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை பின்பற்றி பகுதியில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்கள் சமூக இடியுடன் கூடிய கடைபிடித்து கவசம் அணிந்து தவித்த அரசால் வழங்கப்பட்ட வழிகளை பின்பற்றி பாதுகாப்பு தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பின்வரும் அறிவுரை வழங்கப்படுள்ளது:
- கோயில்களில் பழக்க வழக்கப் படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமையிடத்தில் அனுமதி பெற வேண்டியதில்லை.
- திருவிழாக்களில் கடை பிடித்து வரும் பழக்க வழக்கங்கள் படி மாறுதல் ஏதும் என்று திருக்கோவில் வளாகத்தில் நடைபெற வேண்டும்.
- விழாக்கள் திருக்கோயிலில் சொற்ப அளவிலான திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு முகக்கவசம் அணிந்து 6அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
- திருவிழாக்களில் உபயதாரர்கள்,பக்தர்கள் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை.
- நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசு வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளின்படி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
- திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டி இருப்பின் அனுமதியை பெற்று நடத்தப்பட வேண்டும்.
- இது விழாக்களை பக்தர்கள் தங்கள் நிலங்களில் இருந்து காணும் வகையில் பல நேரடி ஒளிபரப்பு ‘லைவ் ஸ்ட்ரீமிங்’ செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.