#BREAKING: பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.!
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அவகாசம் முடிந்தநிலையில் ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
இதையடுத்து, இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படும் எனவும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால், கவர்னர் உரை தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் கிரண்பேடி உரையை படித்துப் பார்க்க கூடுதல் நேர அவகாசம் வேண்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆளுநர் கிரண்பேடி சட்டசபைக்கு வந்து உரையாற்றவில்லை என்றால் சபையை ஒத்தி வைத்துவிட்டு திட்டமிட்டபடி பகல் 12.05 மணி அளவில் மீண்டும் பட்ஜெட்டை தாக்கல்செய்யப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை தொடங்கியது.
15 நிமிடங்கள் கவர்னர் கிரண்பேடிக்காக காத்திருந்த நிலையில், அவர் வராததால் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆளுநர் உரை நிறுத்தி வைப்பதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என கூறிய ஒத்திவைத்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை எதிர்த்து அதிமுக, என்.ஆர்.காங்., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.