கேரள தங்கம் கடத்தல் வழக்கு ! 180 கிலோ தங்கம் கடத்தல் -விசாரணையில் தகவல்
கேரள தங்கம் கடத்தல் வழக்கில் 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரையும் வருகிற 21-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் பரீத் மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு என்ஐஏ இன்டர்போலைக் கோரியுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.அதை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் கடத்தப்பட்ட மொத்த தொகை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.