ஓடிடியில் வெளியாகிறதா காஜல்-தமன்னா திரைப்படம் .!
குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் உட்பட தமன்னாவின் தேட் ஈஸ் மகாலட்சுமி, ஸாம் ஸாம், பட்டர்ஃபிளை என நான்கு மொழி பதிப்புகளும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை காஜல் அகர்வால் தற்போது நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று பாரிஸ் பாரிஸ். இந்த படம் இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான குயின் படத்தின் தமிழ் ரீமேக்காகும். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் கன்னட ரீமேக் ‘பட்டர்ஃபிளை’ என்ற பெயரில் பரூல் யாதவ் நடித்துள்ளார். இதனையும் ரமேஷ் அரவிந்த் தான் இயக்கியுள்ளார்.
அதனையடுத்து தெலுங்கில் ‘தேட் ஈஸ் மகாலட்சுமி’ என்ற பெயரில் தமன்னாவும், மலையாளத்தில் ‘ஸாம் ஸாம்’ என்ற பெயரில் மஞ்சிமா மோகனும் நடித்துள்ளனர். தெலுங்கு பதிப்பை பிரசாந்த் வர்மா அவர்களும், மலையாள பதிப்பை நீலகண்ட ரெட்டி அவர்களும் இயக்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த நான்கு மொழி படங்களையும் ஓடிடி பிளாட்பாரமான அமேசான் பிரேமில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.