சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது – ஆணையர் பிரகாஷ்

சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து  வருவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பால், 1,70,693 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,481 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில், இந்த கொரோனா வைரஸால், 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில்,  மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு அறிவித்த 1000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையை வழங்கிய பின், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சுய கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என்றும், சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக குறைந்து வருவதாகவும் இதனை நழுவ விடக் கூடாது என்பதற்காக மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.