#முதல்வர் பரபர கடிதம்#இன்று பட்ஜெட்!ஆளுநர் அதிருப்தி..குழப்பம்
புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி எழுத்தியுள்ள கடிதத்தில் கூறியுள்ள்தாவது:
கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன் முதலமைச்சர் நாராயணசாமி அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மானிய கோரிக்கை விவரங்களை முழுமையாக சமர்ப்பிக்கவில்லை என கூறி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பட்ஜெட்டுக்கு அனுமதி மறுப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் மாநிலத்தில் குழப்பம் நிலவுகிறது.இதனிடையே துணை நிலை ஆளுநரின் கடிதத்தை ஏற்க மறுக்கவில்லை என்று முதலமைச்சர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் தாக்கல் குறித்து குழப்பம் நிலவி வருகிறது.