சூரிய குடும்பத்தின் இந்த 5 கோள்களையும் வெறுங்கண்களால் பார்க்க முடியும்.!
சூரிய உதயத்திற்கு முன்னர் அதிகாலையில் சூரிய குடும்ப கோள்களை வெறுக்கங்களால் பார்க்கமுடியும் என வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தின் முக்கிய கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றையும் நிலவின் பிறையையும் அதிகாலை வெறுக்கங்களால் பார்க்கமுடியும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘நாளை அதிகாலையில் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வெள்ளி, செவ்வாய், சனி மற்றும் வியாழன் ஆகிய நான்கு பிரகாசமான கிரகங்களை பார்க்கலாம். பிரகாசமான நட்சத்திரங்களாக கிழக்கு- வடகிழக்கு திசையில் வெள்ளி சற்று மங்கலாக தெரியும். செவ்வாய் தென்கிழக்கில் தனி நட்சத்திரம் போலவும், வியாழன் மற்றும் சனி ஆகியவை தென்மேற்கில் நட்சத்திரங்கள் போலவும் தெரியவரும். இந்த நட்சத்திர சூழலில் புதன் கோளை கண்டறிவது மட்டும் சற்று கடினமாக இருக்கும்.’ என வான்வெளி ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி ஹன்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.