கீழடி அருங்காட்சியகம்.. இன்று அடிக்கல் நாட்டவுள்ள முதல்வர் பழனிசாமி!

Default Image

கீழடியில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், இன்று காலை 10 மணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், எலும்புக்கூடுகள், எடைக்கற்கள், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள், உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயன்படுத்திய பழந்தமிழர்களின் புகழை உலகளவில் சென்றடைவதற்கு அங்கு ஒரு அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆய்வாளர்கள் தமிழக அரசுக்கு சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர், அங்கு உலகத்தரம் மிக்க அருங்காட்சியம் அமைக்க ரூ.12.25 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டவுள்ளதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்