தலைநகரில் குறையும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 1211 பேருக்கு தொற்று உறுதி!
டெல்லியில் ஒரே நாளில் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,793 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,22,793 ஆக அதிகரித்தது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,860 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,03,134 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 83.99 சதவீதமாக உள்ளது.
மேலும், ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,628 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 16,031 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.