B.E/B.Tech இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை இணையதளம் வாயிலாக நடக்கும்- அமைச்சர்

B.E/B.Tech இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரியில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம், இணைய வாயிலாக ஜூலை மாதம் 15-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், B.E/B.Tech மாணவர்களின் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கையும் இந்தியத்தளம் வாயிலாக நடைபெறும் என உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
இந்த இணையதள விண்ணப்பப் பதிவு, ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி நடைபெறும் எனவும், எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும் எனவும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 55,995 மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025