#Breaking : இன்று மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா.!
வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த கொரோனா பாதிப்புக்கு தமிழக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து உள்ளாகி வருகின்றனர்.
இதில், இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ கார்த்திகேயன் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.