“தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில்.. சிவப்பு நிறத்தில் அல்ல”- கொடியேறி பாலகிருஷ்ணன்!
கடத்தப்பட்ட தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில், சிவப்பு நிறத்தில் அல்ல என அம்மாநில கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா மற்றும் அவரின் கூட்டாளிகளான சரித், சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்து, என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அதிக அளவில் தங்கம் கடத்தியதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்கள் தங்க கடத்தல் மேற்கொண்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டு, நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய யாரையும் அரசு பாதுகாக்காது என அம்மாநில கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தநிலையில் இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்த கூட்ட முடிவில் செய்தியாளர்களை கொடியேறி பாலகிருஷ்ணன் சந்தித்தார்.
அப்பொழுது அவர், கடத்தப்பட்ட தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில், சிவப்பு நிறத்தில் அல்ல என தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு, மறைமுகமாக பாஜகவை விமர்சித்தது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.