59 சீன செயலிகளுக்கு தடை.! 200 இந்திய செயலிகள் தயார்.! மத்திய அமைச்சர் விளக்கம்.!
இந்தியாவில் 200 புதிய மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இந்திய அரசானது, நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி, 59 சீன மொபைல் செயலிகளை தடை செய்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூறுகையில், இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் எந்த செயலியையும் அரசு அனுமதிக்காது எனவும், இந்தியர்களின் தரவுகள் அவர்களுக்கே சொந்தம் எனவும் பேசியுள்ளார்.
ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய இறையாண்மையை பாதிக்கும் எந்த செயலுக்கும் இந்தியாவில் இடமில்லை எனவும், இந்தியர்களின் தரவுகளை மற்றவர்கள் கையாள்வதை அனுமதிக்கமுடியாது எனவும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘ இந்தியாவில் 200 மொபைல் செயலிகள் தயார் ஆகி வருகின்றன. ‘ எனவும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.