குஜராத்தில் போலி டோசிலிசுமாப் தடுப்பூசி விற்ற மூன்று பேர் கைது.!
கொரோனா சிகிச்சையில் டோசிலிசுமாப் என்ற தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூரத் மற்றும் அகமதாபாத்தில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து போலி டோசிலிசுமாப் மருந்தை விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு சங்கம் (எஃப்.டி.சி.ஏ) தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளி உறவினரால் வாங்கப்பட்ட டோசிலிசுமாப் ஊசி போலியானது என்பதை அறிந்த அகமதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் தேவாங் ஷா புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கொரோனா நோயாளி உறவினர் எந்த சீட்டு இல்லாமல் அகமதாபாத்தில் உள்ள மருந்தகத்தில் இருந்து ரூ .1.35 லட்சத்திற்கு மூன்று ஊசி மருந்துகளை வாங்கியதாக அதிகாரிகள் தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக, சூரத்தில் உள்ள முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சோஹல் இஸ்மாயில் தை வீட்டில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து ரூ .8 லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள், போலி மருந்துகள் மற்றும் பேக்கேஜிங் பொருட்கள் ஆகியவற்றை எஃப்.டி.சி.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இந்த வழக்கில் தாகூர், லாலிவாலா மற்றும் சோஹல் இஸ்மாயில் தை ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.