ஓய்ந்து வரும் கொரோனா ! சீனாவில் திரையரங்குகளை திறக்க முடிவு
சீனாவில் வரும் 20ம் முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக இருப்பது என்னவென்றால் அது கொரோனா வைரஸ் தான் , இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதிலும், கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகள் எனக் கூறப்படும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகமாக பாதித்துள்ளது. மேலும், பொருளாதாரமும் இங்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதர பாதிப்பு வல்லரசு நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை அனைத்து நாடுகளிலும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது . ஒரு நாட்டின் முதுகெலும்பு என்றால் அது பொருளாதாரம், அப்படி இருக்கையில், இந்த கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் பெரிதாக பாதித்துள்ளது.
ஆனால், கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும், சீனா தற்போது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளது.இதனிடையே சீனாவில் சுமார் 6 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இந்நிலையில் வருகின்ற 20-ஆம் தேதி முதல் அங்கு திரையரங்குகள் திறக்கப்படுகின்றது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.மேலும் திரையரங்கிற்கு வரும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.