கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இங்கிலாந்து இயல்பு நிலை திரும்பும் – போரிஸ் ஜான்சன்
கொரோனா வைரஸ் காரணாமாக அதிகம் பாதித்த நாடுகளில் இங்கிலாந்து உள்ளது. இதுவரை இங்கிலாந்தில் ,2,94,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அடுத்து வரும் மழைக்காலத்தில் கொரோனா 2-வது அலை ஏற்பட வாய்ப்பு என்பதால், சுகாதார திட்டத்திற்கு 3 பில்லியன் பவுண்டுகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் முதல் தேசிய அளவிலான கட்டுப்பாடுகளால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தளர்வுகளை அறிவித்து வருகிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இங்கிலாந்து இயல்பு நிலை திரும்பும் என்பது நம்பிக்கை என அவர் கூறினார்.